-‐----------------------------‐----------------------------‐-------------
பொதுவாக மனைவியை புரிந்து நடக்கத் தெரியாத கணவன் என்றே அதிகம் குறை கூறுவர்.. ஆனால் கணவனை புரியாத மனைவியினால் தான் கணவன் புரிதலற்றவனாய் பேசப்படுகின்றான்...
கணவனிடம் எத்தனையோ விடையங்களை மனைவி அதிகம் எதிர்ப்பார்ப்பவளாய் இருக்கின்றாள்...♡
அன்பு, பாசம், காதல், கரிசணை, பாதுகாப்பு, அக்கறை, நம்பிக்கை, தன் மேல் மாத்திரம் அதிக உரிமை, அவரின் தாயை விட நான் தான் முக்கியத்துவம் பெற வேண்டும், பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக பங்களிப்பு,
தனக்காய் மாத்திரமே செலவு செய்ய வேண்டும்...
இப்படி இன்னும் ஏராளமானதை அடிக்கிக்கொண்டே போகலாம்...
அது போலவே...
தன் மனைவி மக்களுக்காய் கஷ்டப்பட்டு தன்னை அர்ப்பணித்து தன் மூச்சாய் சுவாசிக்கும் மனைவியிடம் பல விடயங்களை அவனும் எதிர்பார்க்கின்றான்...!!
சமைத்து கொட்டுவதிலும், ஆடை துவைப்பதிலும், இரவில் மாத்திரம் நிம்மதி தேடுவதிலும் இல்லை உண்மையான காதல்..♡ இது எல்லா பெண்களாலும் இயன்ற ஒன்றே...
மார்க்கம் கற்றுத்தந்த முன்மாதிரி ஸஹாபியப் பெண்கள் தன் கணவனை மதிப்பதிலும் கண்ணியப்படுத்தவதிலும்
கட்டுப்படுவதிலும்
சிறப்பு வாய்ந்தவர்கள்.!!!..
அவர்களின் உணர்வுகளுடன் நம் உணர்வுகளை சற்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எத்தனையோ துன்பங்களுடனும் காபிர்களுடனும் அநியாயக்காரர்களுடனும் மிகவும் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டுள்ளனர்..
திருமண வாழ்வென்பது மனித வாழ்வில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று ..தனக்காக வாழ்ந்த காலம் முடிந்து நமக்காய் வாழுகின்ற அழகான ஓவியக்காதலது...❤️
குடும்ப வாழ்வில் விரிசல்கள் பிரச்சனைகள் வருவது யதார்த்தம்...
கணவன் அதிகம் கோபம் கொண்டவன் என்பதற்காக அவனை விட்டு விட்டு வேறு வாழ்க்கை தேடும் காலமிது...
தவறின் போது உனை திட்டுகிறானா ? சில போது கண்டிக்கின்றானா...?
உனக்கு அதிக கட்டுப்பாடுகளை வகுக்கின்றானா...?
அவன் சொல் கேட்க வேண்டுமென்பதில் பிடிவாதமாய் இருக்கின்றானா...?
உன் பேச்சுகளில் நளினத்தை எதிர்பார்க்கின்றானா...?
அந்நிய ஆண்களைப்பற்றி பேசினாலே ரோஷம் கொள்கின்றானா...?
உனை மற்றவன் பார்ப்பதை விட்டும் பாதுகாக்கின்றானா...?
அவன் ஒருவனுக்காய் மாத்திரமே வாழ வேண்டும் என்று விரும்புகின்றானா...?
மார்க்க விடயங்களில் அலட்சியமாய் இருப்பதை வெறுக்கின்றானா...?
குழந்தையை பராமரிப்பதில் அக்கறை கொள்கின்றானா..?
உனக்காகவே வாழத்துடிக்கின்றானா...???
அப்பெடியென்றால் உனக்கு கிடைத்தது 🤍மார்க்கப்பற்றுள்ள சிறந்த துணை🤍 என்பதை மறந்து விடாதே...!!!
உன் பொடுபோக்குத்தனத்தால் அவரை ஒருபோதும் இழந்து விடாதே....!!!
அவன் பக்கம் ஆயிரம் தவறுகளும் குறைகளும் இருக்கட்டும் பரவாயில்லை ...
புரிதலின்றி சில போது உன் மனதினை துண்டாடிய பொழுதாகவும் இருக்கட்டும்...
அவன் கை விரல்கள் சில போது உன் மேனியை கீறலாய் ஆக்கியிருக்கட்டும்...
உனை வேண்டாமென்று வார்ததையால் ஒதுக்கியிருக்கட்டும்... நிம்மதியை தொலைத்தவள் என்று திட்டியிருக்கட்டும்... பருவாயில்லை...
அவன் உன் கணவன்...♡♡♡
இறைவனால் உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டவன்...♡♡♡
எப்படியான சூழ்நிலைகளிளும் கணவனை மீறி நடப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை...
கொடுங்கோலன் பிர்அவ்னுடனே ஆசியா நாயகி வாழந்து விட வில்லயைா....???
இவனை விடவா.. ????
நாம் நம் கணவன்மார்களை எங்கோ வைக்க வேண்டும்...
கணவன் தன் மனைவியின் இதயமான இரண்டாம் கருவறையில் வாழத்துடிக்கின்றான்...💓
♥وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا *وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً* اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 30:21)
♥هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَا فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنْ اٰتَيْتَـنَا صَالِحًا لَّـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
(அல்குர்ஆன் : 7:189)
அமைதியளிப்பவளாகவும் #
இன்பமானவளாகவும் #
கணவனைக்கவர்வதில் திறமை கொண்டவளாகவும் #
இருப்பது போல்...
அவருக்கு பிடிக்காதவற்றிலிருந்து ஒதுங்கி, அவர் விரும்புமளவு எல்லா விடயத்திலும் முற்றிலும் கட்டுப்பட்டவளாக வாழ்ந்தாலே போதும் விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்லும் பாக்கியம் கிடைத்து விடும்...إن شاء الله...
சுவனத்தில் ஹூர்உல் ஈன்களாய் நம்மையே வரம் கேட்குமளவு காதலுடன் கூடிய பாசத்தை அள்ளிப்பொழிந்திட வேண்டும்...
❣️புரிதலில் தான் உண்மையான காதல் தங்கியுள்ளது...
ஒருவரையொருவர் புரிந்து நடந்தாலே போதும் உலகிலும் சுவன வீடு தான்...💕
ஆக்கம் :
Sahla Binth Shafi..
《Islahiyyah Arabic College, Ladies Campus...》 ★★★★★★★★★★★★★★★
No comments:
Post a Comment