Tuesday, October 6, 2020

அடுத்தவர்களை நேசியுங்கள்...


அடுத்தவர்களை நேசியுங்கள்...
அடுத்தவர்கள் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொள்ளுங்கள்...

கடைசியாக எப்போது கதைப்போம்
அல்லது எப்போது சந்திப்போம் என்பது யாருக்கும் தெரியாது

அடுத்தவர்களை சகித்துக் கொள்ளுங்கள்
"ச்சே,அநியாயம்" போன்ற வார்த்தைகள் 
இழந்து விட்டதை ஒரு போதும் திரும்ப கொண்டு வர மாட்டாது.

நன்றாக நினைவில் வைத்திருங்கள்
வாழ்கின்ற போது சொல்கின்ற நல்லதொரு வார்த்தை 
மரணித்ததன் பிறகு பிரேதத்தின் நெற்றியில் வழங்கப்படுகின்ற முத்தத்தை விட மிக மிக சிறந்தது.

அலி தன்தாவி (ரஹ்)

Sunday, October 4, 2020

"ஆயிஷாவைப் பற்றி பேசி என்னை நோவினை படுத்தாதீர்கள்.."

2
"ஆயிஷாவைப் பற்றி பேசி என்னை நோவினை படுத்தாதீர்கள்.."
உயர்ந்த காதலை உணர்த்துகின்ற இறைத் தூதரின் வார்த்தைகள் இவை...!!!💙

நீ நேசிக்கின்றவருக்கு ஏற்படும் வலி,
உன்னை நோவினைப்படுத்தும்...!
பல போது அந்த வலியை,
அவரை விட இரட்டிப்பாக நீ உணர்வாய்...♡

"உனதுள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரேயொரு கவலை;
எனதுள்ளத்தில் பல கவலைகளாகி என்னை வதைக்கும்."💙

#எகிப்து_கவிஞர்_ராபிஈ#
||The_Lines_Of_Thoughts||