Tuesday, August 18, 2020

கவிதைகள் - 02


♥️ எல்லா நேசத்திலும் வேதனை தான்... அல்லாஹ்வின் நேசம் தவிர..♥️

அதில்தான் எப்போதும் நிம்மதி..!
____________________________________________________________ 

•○•●••○••●•○•
நிறங்களை பற்றி 
விவாதிக்க
குருடர்களுக்குத் தெரிவதில்லை...!

இனியகுரல் தேடி 
ஓடுவதற்கு
செவிடர்களுக்கு ஆசையில்லை...!

மொழி மோகம் 
கொள்ளவதற்கு
ஊமைகள் புறப்படுவதில்லை...!

ஆனால்..
*எல்லாமிருக்கும் நாம்*
*தான்*
இன்னுமின்னும்
*எல்லாம் தேடி*
அலைந்து கொண்டிருக்கிறோம்...!

அவன்..#
*அருளாளன் தந்திருக்கும்*
*அருட் கொடைகளுக்கு*
போதுமென்ற திருப்தியோடு
நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்..!!

சுப்ஹானக்க யா ரப் !!
அல்ஹம்துலில்லாஹ் !!
🧡💛🧡
____________________________________________________________ 

*🤎 வார்த்தையும் நடத்தையும் அளவெடுத்துக்கொண்டு இருக்கின்றன ; _நட்பின் நீளத்தினை..._🤎*
____________________________________________________________ 

*♡ உன் மகிழ்ச்சியில் கவனமுள்ளவருக்கு...♡*

*° உனது அன்பைக் கொடு..♥️*

*♡ அதில் நிம்மதியை விதைப்பவருக்கு...♡*

*°அங்கே குடியிருக்கச் செய்...♥️*
____________________________________________________________ 

🤍🤍🤍
🌀அழுத்தங்கள் நீடித்தால் சில இயல்புகள் தொலைவது போல,,,
🌀பிடித்தங்கள் அதிகரித்தால் சில பிடிவாதங்கள் இணைவது போல,,,
*#எல்லா செயல்களுக்குமே ஒரு பிரதிபலிப்பு உண்டு...!!*

🌀தொலைதூர நிலவு ரசனைக்குப் பாத்திரமாவது போல,,,
🌀தொலைந்த நிமிடங்கள் மீண்டும் தேடலுக்குட்படுவது போல,,,
*# கைக்கெட்டாதவைகளே அதிகம் நேசத்திற்குள்ளாகின்றன..♡*

🌀பிரிவுகள் புரிதலைத் தோற்றுவிப்பது போல,,,
🌀கைதவறியவை அத்தியாவசியமாவது போல,,,
*# இழப்புக்களே ஒன்றின் பெறுமதியை உணர்த்துகின்றன...♡*

*♥வாழ்வின் சுவாரஷ்யம் எதிர்மறைகளில் உண்டு....புரிதல்களில் நிம்மதிக்கான அர்த்தம் உண்டு..♥*
____________________________________________________________ 

❤️💕
*#நேசத்தை, நேசத்தால் மட்டுமே விலை கொடுத்து வாங்க முடியும்....!!!💕❤️
____________________________________________________________ 

💙💙💙எந்த உறவாக இருந்தாலும் ஆரம்பத்தில் உணர்வுகளையே வெளிக்காட்டுகின்றனர்...!!!🤍*

*●• கடைசியில் பண்பாட்டை காட்டி விட்டு போய் விடுகின்றனர்...!!!*

----------------------------------

# நாம் தெரிவு செய்யும் உறவுகளைப் பொறுத்தே நம் வாழ்வின் இன்பம் அமைந்திருக்கிறது...♡...

*☆ அழகிய உள்ளம் கொண்ட உறவுகளாலே* அழகிய பண்பாடுகளுடன் கூடிய உணர்வுகளை வெளிக்கொணர முடியும்...!!!
♥♥♥
____________________________________________________________ 

*🤍மகிழ்ச்சி என்பது...🤍*

*# காரணமின்றி மற்றவர்கள் உன்னை நேசிக்கும் வரத்தை அல்லாஹ் வழங்குவது...!!!♥*

*# அந்த நேசத்தை நிபந்தனை ஏதுமின்றி மக்கள் உன்னிடம் பரிமாறிக் கொள்வது..!!!♥*
____________________________________________________________ 

*# கவலை கொண்டவன் உன்னிடம் வந்தால்...🤍*

அவன் சொல்வதை காதுகொடுத்துக் கேள்..!
மன்னிப்புக் கேட்டு ஒருவன் உன்னிடம் வந்தால் அவனுக்கு மன்னிப்பை வழங்கு..!
தேவையுடையவன் உன்னிடம் வந்தால் அவனுக்கு உதவிடு..!

இது ஒன்றே போதும் ...
அவன் சுமைகள் பாதியளவேனும் குறைந்திட..#

💙💙💙
____________________________________________________________ 

🤎🤎🤎
*▪︎மற்றவர்களையும் நீ மதிக்கின்றாய்...♡*
*▪︎அவர்களில் நீ கவனமுள்ளவராகவும் இருக்கின்றாய்...♡*
என்பதை *அவர்களுக்கு நீ உணரச் செய்...!!!*

*♥# அவர்கள் உன்னை நேசிப்பார்கள்..# ♥*
____________________________________________________________ 

*# நல்ல நண்பர்கள் எமது வாழ்க்கையின் மிக முக்கியமானவர்கள்...!!!♥*

அவர்களை *பிரிகின்ற போது...#*
🔅எமது புன்முறுவலை...
🔅எமது எதிர்ப்பார்க்கைகளை...
🔅எமது துணிவை...
 *இழந்து விடுகின்றோம்...!!!♥
____________________________________________________________ 


*🤍ஒரு பெண்ணை உடலாக மட்டும் பார்த்து ரசிப்பவன் அல்ல ஆண்...#*
மாறாக... *_அவளின் உள்ளத்யையும் ஈமானையும் கண்டு நேசிப்பவனே சிறந்த ஆண்...🤍*____________________________________________________________ 

*♥திறந்த மனம் என்றாலும் கூட... அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கின்றன...♥
____________________________________________________________

*"மற்றவர்களைக் காயப்படுத்துவதனை விட்டும் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்..!!!*

 அப்படி ஏதும் நடந்து விட்டால் *மன்னிப்பு கேட்க வெட்கப்பட வேண்டியதில்லை..#*

நாளை வரை நேரம் உத்தரவாதம் கிடையாது...!

 *🤎 மற்றவர்களது வலிகளுக்கும் அழுகைகளுக்கு காரணமாவதை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பானாக !!!"*
____________________________________________________________ 

♡ சிந்தனைக்கு...!!!

*# அடுத்தவர்களின்* *நிலைமையை* 
*சிந்திக்க தெரியாதவர்கள்...;*

*●• அடுத்தவர்களை பற்றி குறை சொல்ல தகுதியும் உரிமையும் இல்லாதவர்களே..!!!*
____________________________________________________________ 

_●• இன்றைய சிந்தனை •●_

*# அல்லாஹ்வுக்கு விருப்பமானதை நீ செய்து விட்டு...;*

*🤍 உனக்கு விருப்பமானதைக் கேள்...!!!*
____________________________________________________________ 

🍁🍁🍁
*# சிறந்தவைகள் சீக்கிரம் கிடைப்பதில்லை...!!!*

உன் விடயத்தில் யாரும் நம்பிக்கையிழக்கலாம்;
ஆனால்
*நீ இழந்திடக்கூடாது...!*

கறுமேகங்கள் சூழ்ந்தாலும் *கவலையடையாதே...!*
காரிருளின் பின்னரே
சோ.. வென மழைப்பொழிகின்றது...🧡
____________________________________________________________ 

*♥திறந்த மனம் என்றாலும் கூட...  அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கின்றன...♥
____________________________________________________________ 

*# எதனையும் நீ பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாது...🧡*

*- பெற்றுக் கொண்டதிலிருக்கும் உனது திருப்தி தான் அதனை பூரணப்படுத்தும்...🧡
____________________________________________________________ 

```# நம் வாழ்விலிருந்து```
*காரணமற்ற காரணங்களைச் சுமந்தபடி பிரிந்து செல்பவர்களுக்குச்* சொல்ல ஒன்றுமே இல்லை என்னிடம்...♡♡♡

```💚அன்பானவர்களே..!!!```

```#சருகுகள்🌿🌿🌿```
*உதிர்ந்து விழுவதைப் பற்றி*
```யாரிடம்```
```புகார் சொல்ல ???```
💚💚💚

No comments:

Post a Comment