Sunday, August 2, 2020

__♡__அன்பு மடி__♡__

•○•●•○•●•○•●•○•●•○•●•○•

ஆயிரம் கோடி உறவுகள் கூடி நின்று அரவணைத்தாலும்
   ♡ அன்பின் மடி போல் ஆகிடுமா...?

நீ தந்த முதல் முத்தமும் கரையாமல் என் கன்னங்களில் ஈராமாய் இருக்குதம்மா...!

அன்பு மடியில் அள்ளியணைத்து அதே முத்தம் இன்றும் தருவாயோ...!

இதயத்திலே எனைத் தாங்கிடும் உறவு வந்த பின்னும்
என் இதயம் தேடிடும் உன் அன்பு மடி...!

வேதனைகளும் சுகங்களாய் மாறிப்போகிறது...
உன் அன்பு மடியில் தலை சாய்த்திட்ட மறுகணமே...!

நோயின் போது என் தலை தாங்கிடும் உன் அன்பு மடி..!!!

கவலைகளில் தலைக்கோதிடவும் உன் அன்பு மடி...!!!

வாய் ஓயாமல் கதை பேசிடவும்  உன் அன்பு மடி...!!!

கண்ணீரின் ரகசியங்களை உணர்ந்திடவும் உன் அன்பு மடி...!!!

உறவுகள் தொலைந்த பின்னும் உன் அன்பு மடி...!!!

அன்பினில் தோற்ற போதும் உன் அன்பு மடி...!!!

சண்டைகளின் பின் ஓடி வந்து விழவும் உன் அன்பு மடி...!!!

சந்தோஷத்தில் இன்பம் கண்டிடவும் உன் அன்பு மடி...!!!

ஒரு போதும் ஈடாகாது வேறாரின் அன்பு  மடி...!!!

கிடைக்குமோ...!!!
மீண்டும் அந்த வரம்...♥
ஆயுள் முழுதும் பாசம் கொண்ட என்           #அன்னையின் அன்பு மடி...♥

வரிகள்...#
✍🏻sahla shafi 《islahi》
           PUTTALAM

No comments:

Post a Comment