Sunday, July 26, 2020

உனக்கும் எனக்கும் இடையே...♥

♥ உனக்கும் எனக்கும் இடையே...♥
✍🏻ஆக்கம்:
          《Sahla Shafi - Islahi》
                # PUTTALAM.
•●•○•●•○•●•○•●•○•●•○•●•

# கணவனையும் சற்று புரிந்து கொள்வோம் என்ற கட்டுரை  பெண்கள் முழுமையாக தன் கணவனை புரிந்து நடக்க வேண்டும் என்பதை  உணர்த்தியிருக்கும்...♥

அதைத் தொடர்ந்து
சில பெண்களின் கண்ணீருக்கும் கவலைக்கும் பின்னே ஓர் ஆண் காரணமாக இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும் ...

தன்னை அர்ப்பணித்து உதிரங்களை இழந்து தன் கணவனுக்காய் எத்துனையோ ஆசைகளையும்  கனவுகளையும் தன்னுள்ளே புதைத்து  வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களை பார்க்கின்றோம்...

எல்லா கணவன் மனைவி உறவுகளும் கசப்பாகவே இருக்கின்றது என்று இந்த பதிவை நான் எழுதவில்லை...

✨சில புரிந்துணர்வுகளற்ற கசங்கிய பக்கங்களைக் கொண்ட உள்ளங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றேன்..!!!

புரிந்துணர்வுகள் தான் வாழ்வை அழங்கரிக்கும். 

❤️❤️❤️

# உனக்கும் எனக்கும் இடையே...!!!
~~~~~~~~~~♡♡♡~~~~~~~~~~

கணவன் மனைவி உறவென்பது மகத்தான ஒன்று...
ஒருவர் மற்றவரை புரிதலில் தான் வாழ்வின் முழு இன்பமும் மறைந்திருக்கின்றது...புரிதல் இல்லாத போது ஏற்படும் சிறு உரசலும் உராய்வும்...
உணர்வுகளைக் கீறிக்கிழித்து வாழ்வையே திசை திருப்பி விடும்..
எனவே ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து மிகவும் கவனமாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்..!

# எல்லா விடயங்களில் மனைவி தனக்கு விரும்பியதாற் போல் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் கணவன்...;

தன் *மனைவியின் விருப்பு வெறுப்புகளுக்கும் எதிர்ப்பார்க்கைகளுக்கும்  இடமளிக்கத் தவறுகின்றான்...!!*
அவளுடன் மென்னையாகவும் மிருதுவாகவும் நடந்த கொள்ள மறுக்கின்றான்...
அன்பினால் கைக்கொள்ளும் ஆயுதமிருக்க வேண்டா வெறுப்புடன் அவளை உதறித்தள்ளுகின்றான்...

~ பெண் என்பவள்... மென்னுணர்வு கொண்ட மென்மையானவள்...♡
ஆணிடம் அன்பையும் அரவணைப்பையும் அளவுக்கதிகமாக எதிர்ப்பார்ப்பவள்...♡
தன்னிடம் அன்பு மழையை எப்பொழுதம் பொழிய வேண்டும் என்று ஆசை கொள்பவள்...♡

தான் தவறும் பட்சத்தில் அன்பாலே தண்டிப்பை பெற்றிட
விரும்புபவள்...♡

கோபம் கொண்டதன் பின்னும் தானாக வந்து தன்னிடம் கொஞ்சிப் பேசிட மாட்டானா ...? என்று ஏங்குபவள்...♡

மனது புண்படும் வேலைகளில் கண்ணீரின் மௌன மொழிகளுக்கு அவன் அணைப்பில் மாத்திரமே ஆறுதல் தேடுபவள்...♡

ரோஷம் கொண்டவள்...♡
இருப்பினும் உன் அன்பை அவள் அன்பால் வென்றவள்...♡♡♡

இதனை அவன் புரிந்து கொண்டே ஆக வேண்டும்...!
தனக்கேற்றாற் போல் வாழ வேண்டும் என நினைக்கும் ஓர் ஆண் அவளது உணர்வுகளையும் உள்ளத்தையும் புரிந்தே நடக்க வேண்டும்...!!!

அப்போது தான் ஒரு பெண் பல தியாகங்களின் பின்னும் தன் கணவனின் அன்பிருக்க எதையும் போராடி வென்றிட முனைவாள்...#

குழந்தைகளுக்காக அவள் படும் கஷ்டங்கள்...ஏராளம்...;
அல்லாஹ் கண் குளிர்ச்சியாய் கணவனையும் குழந்தையையும் ஒரு பெண்ணுக்கு அமைத்து வைத்திருப்பதின் இன்பத்தை தன் கணவன் மூலமே உணர்ந்து கொள்கின்றாள்...

தனது குடும்பத்தையும் 
கணவனது குடும்பத்தையும்
உறவுகளையும்
நட்புகளையும்
அயல் வீட்டார்களையும்
அனுசரிப்பதிலும் அரவணைப்பதிலும் அவள் எதிர் கொள்ளும் சவால்களும் ஏராளம்...

வாழ்க்கை பயணத்தில் பல போராட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவள்...#

அத்தனையும் ஜெயித்திட அன்பு நிறைந்த அவள் துணை போதும்...✨

இப்படி வாழ்வின் பல கட்டங்களையும் பெண்ணின் தியாகங்களையும் கூறிக் கொண்டே போகலாம்...

☆ சரியான தெரிவுகள் தான் வாழ்வை இன்பமாக்கும் ...☆
எனவே தெரிவின் போதே தமக்கேற்றாற் போல் துணையை தெரிவு செய்து கொள்ள வேண்டும்...

# தான் விரும்பிய வாழ்வு அமையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு அமையப் பெற்ற வாழ்வை அல்லாஹ்வின் திருப்தியோடு தமக்கு பிடித்தாற் அமைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்...!

இதற்கு புரிந்துணர்வு என்ற ஒன்று தான் இருவருக்கும் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்...◇

▪︎பக்குவமும், பரிவும், பொறுமை காக்கும் உள்ளமும், விட்டுக் கொடுப்புகளும் தன்னகத்தே கொண்ட பெண் எப்படிப்பட்ட துணையையும் அன்பால் சாதித்து கொள்வாள்...▪︎

♥நீ அவளுக்கான இறை தெரிவு ..
உன்னில் அமைதியை, அன்பை, கருணையை, உண்மையான புரிதலை காண வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவளோடு உன்னையும்... உன்னோடு அவளையும் இணைத்து வைத்திருக்கின்றான்...♥

# وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا *وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً*   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ 
இன்னும், *நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.*
_(அல்குர்ஆன் : 30:21)_

எனவே, *✨புரிந்துணர்வுடன் கூடிய காதலன்பை உண்மையாக உனக்கும் எனக்குமிடையே பகிர்ந்து கொள்வோம்...✨*
________________________
வாசிப்புடன் மாத்திரம் நின்று விடாமல் வாழ்விலும் சில விடயங்களை எடுத்து நடப்போம்...அப்போது இறை அன்பை நம் வாழ்விலும் உணர முடியும்...!!!
In sha allah...


•●•○•●•○•●•○•●•○•●•○•●•

1 comment: