﷽ உண்மைச் சம்பவம் கணவனுக்காக
உருகிய மனைவியும் அருளாளன் அல்லாஹ்வின் கருணையும்.!!
சிறு சிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன் மனைவிக்கான உண்மைச் சம்பவம்.
TVயில் மார்க்க நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது பெரும் அறிஞர்களில் ஒருவரான United Arab Emirates நாட்டின் மார்க்க அறிஞர்கள்
சபைத் தலைவர் Ash Sheikh Abdullah
அவர்கள் மார்க்க விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒரு விடயத்தில் மார்க்கத் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள
Algeria நாட்டு பெண்ணொருவர் அவருடன் தொடர்பை ஏற்படுத்துகின்றார்.
நான் Algeriaயாவைச் சேர்ந்த அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிம் பெண் ஆனால் என் கணவரோ
மது அருந்துகின்றார் இரவின் கடைசிப் பகுதியிலேயே வீட்டுக்கு வருவார் ஒரு
நாள் இரவு நான் Al Quran ஓதிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்தவர் என் கையிலிருந்த அல் குர்ஆனை பறித்தெடுத்து கிழித்து எறிந்து விட்டார் இவரோடு என்னால் வாழ முடியுமா? அல்லது விவாகரத்துக் கோரவா? என்ன சட்டம் என்று கேட்டாள்.
இருவருக்குமிடையில் கீழ்வரும்
உறையாடல் தொடர்கிறது.!!
அறிஞர்: உமக்கு பிள்ளைகள் இருக்கின்றனரா...
பெண்: ஆம் 5 பிள்ளைகள்..
அறிஞர்: உனக்கு குடும்பம் இருக்கின்றதா.
பெண்: ஆம். ஆனால் அவர்கள் வெகு தூரத்தில் கிராமத்தில் வசிக்கின்றனர்
நான் தலைநகரில் வசிக்கின்றேன்..
அறிஞர்: தற்போது உன்னை ஆதரிக்க யாராவது இருக்கின்றனரா..
பெண்: இல்லை எனது பிள்ளைகள்
இன்னும் சிறார்கள்...
அறிஞர்: அவ்வாறெனில் உன் இடத்தில் அப்படியே பொறுமையாக இரு விவாகரத்தும் கோர வேண்டாம் எந்தப் பிரச்சினைக்கு நீ போகவும் வேண்டாம்..
பெண்: எவ்வாறு நான் பொறுமை காப்பது இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்.
அறிஞர்: மகளே! நீர் உன் கனவரை விட்டுப் பிரிந்து சென்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம் அல் குர்ஆனை கிழித்து வீசும் ஒருவருக்குப் பகரமாக ஆறு 6 உருவாகுவர் ஏனெனில் உன் கணவர் பிள்ளைகளை கொண்டு செல்வார் அவரது இயல்பிலும் குணத்திலுமே அவர்கள் வளர்வார்கள் மது அருந்துவார்கள் அல் குர்ஆனை கிழிப்பார்கள் அதனால் நீ பிரிந்து வீட்டை விட்டுச் செல்வதில் எந்தத் தீர்வுமில்லை எனவே பொறுத்திரு உன் பிள்ளைகளைக் காக்கும் பாலமாக இரு என்றாலும் உன் கணவரின் நேர் வழிக்காக இரவு வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்..
பெண்: இன்ஷா அல்லாஹ்...
நாட்களும் மாதங்களும் கடந்து சென்றன ஒரு வருடத்தின் பின்னர் குறித்த அறிஞர் மற்றுமொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் பலர் தம் சந்தேகங்களைக் கூறி தெளிவுபெற்றனர் அந்த Algeria பெண்ணும் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார்.
பெண்: அஸ்ஸலாமு அலைகும் ஷேக்.
அறிஞர்: வஅலைகுமுஸ்ஸலாம்..
பெண்: என்னை ஞாபகமில்லையா ஷேக்.
அறிஞர்: இல்லை சற்று அறிமுகம் செய்யலாமா..
பெண்: நான்தான் ஒரு வருடத்திற்கு முன் தொடர்பை ஏற்படுத்தி மது அருந்தும் என் கணவர் பற்றிக் கூறிய
Algeria பெண்..
அறிஞர்: இப்போது அறிந்து கொண்டேன் உன் நிலைமை எப்படி மகளே..
பெண்: ஷேக் தற்போது என் கணவர் பஜ்ர் தொழுகைக்காக பள்ளியின் கதவைத் திறக்கின்றார் பாங்கு சொல்கின்றார் இரவு வணக்கங்களில் ஈடுபடுகின்றார் Al Quran ஓதுகின்றார் அனைத்து கடமையான சுன்னத்தான தொழைகைகளையும் தொழுகின்றார் அல்லாஹ் என் கணவருக்கு உண்மையான நேர்வழியை வழங்கி விட்டான் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்...
அவள்தான் உண்மையுடன் அல்லாஹ்வை நெருங்கி பொறுமையுடன் முயற்சி செய்த பெண்..
அல்லாஹ் அவளது முயற்சியையும் பொறுமையையும் அவளது தூய்மையான உள்ளத்தையும் அறிந்து அவளது பிரார்த்தனையை அங்கீகரித்து விட்டான் முதலாவதாக இது அல்லாஹ்வின் பேரருள் பின் அந்த மனைவியின் பொறுமையும் அவளது அர்ப்பணிப்புமே காரணம் இது அல்லாஹ்வின் மீதான அவளது நம்பிக்கையின் அறுவடை அத்துடன் அந்த அறிஞரின் மார்க்கத் தீர்ப்பின் சிறப்பு..
சிறுசிறு விடயங்களுக்காக விவாகரத்தை நாடும் கணவன்மார்களே! மனைவியரே! சிந்தித்து செயற்படுங்கள்...
அமானிதமான உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்கி விடாதீர்கள். அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள் பண்பாடுள்ள சமூக உருவாக்கத்துக்காக சற்று பொறுமையுடன் பயணியுங்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை வழங்கி அருள் பாலிப்பானாக.
முடிந்தளவு மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக திருந்தி வாழட்டும்.
- பாஹிர் சுபைர்-முகநூல் பதிவில் இருந்து Copy படித்ததில் பிடித்தது....
No comments:
Post a Comment